Header image alt text

கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று விசாரித்து வந்தனர். Read more

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக, பிரித்தானியாவினால் 1.3 மில்லியன் டொலர் நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேலைத்திட்டத்தின்கீழ், இந்நிதி வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,500 க்கும் அதிகளவிலான மக்களை மீள்குடியேற்றுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு மதவாச்சி புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி நாளை 17ம் திகதிமுதல் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதிவரை இது அமுலாகும் என்று அந்த திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறியுள்ளார். Read more

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குள் சிறைகாவல்துறை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அண்மையில், சிறைச்சாலை புலனாய்வு பிரிவு கலைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை விடயங்களில் இந்த பிரிவை அதிகாரமிக்க உத்தியோகபூர்வ காவற்துறை பிரிவாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால், நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் போராட்டத்தில், அரச முற்போக்குச் சாரதிகள் சங்கம், மேல் மாகாணத் தனியார் பஸ் சாரதிகள் சங்கம், இலங்கைத் தனியார் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் சங்கம், துறைமுகக் கொள்கலன் வாகனச் சங்கம் மற்றும் கொழும்பு நகர்ப்புற ஓட்டோ சங்கள் ஆகியனவும் இணைந்துள்ளதாக, இன்று காலை அறிவிக்கப்பட்டது. Read more

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்திருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.

இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை அமைச்சர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டித்திற்கான கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்ததுடன் வைத்தியசாலையின் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டார். Read more

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவி வருவதாக பிரிட்டனின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் வழங்கும் 10 இலட்சம் ஸ்டேலிங் பவுண் நிதியுதவி மூலம் மீளக்குடியமர்ந்த 600 குடும்பங்கள் வரை பயன்பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஊக்குவிப்பதில், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். Read more

தனியார் பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும். சில பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைகோர்த்துள்ளனர். எனினும், பஸ் உரிமையாளர்கள் இணைந்து கொள்ளவில்லை. Read more

இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் இலங்கையில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 1779 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

282 கொலைச் சம்பவங்களில் 28 கொலைகள் துப்பாக்கி பிரயோகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு 452 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக, தற்பொழுது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் அனைத்தும் ஹெலிகொப்டர் மூலம் அப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

நேற்றையதினம் மற்றும் இன்றையதினம் ஆகிய இரு தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவும் கடற்பகுதிகளில் வீசும் வேகமான காற்றின் காரணமாகவும், கடல் மார்க்கமாகப் பயணம் செய்யமுடியாத காரணத்தால், பரீட்சைக்கான வினாத்தாள்களை ஹெலிகொப்டர்மூலம் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.