Header image alt text

செஞ்சோலை படுகொலையின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 54 மாணவர்களும் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

இந்த படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு தடைகள் மீது கார் ஒன்று மோதியதில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் எவரும் உயிரிழக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சன நெரிசலான பகுதியில் கார் மோதியுள்ளதாகவும், எவ்வாறாயினும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தபால் மா அதிபராக இருந்த ரோஹண அபேரத்ன ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார். லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். Read more

வேவர்லி தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இருவர் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மேலும் வலுச் சேர்க்கும் வகையில், ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், தலவாக்கலை- டயகம பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவரின் உடல்களை, சவப்பெட்டிகளில் வைத்தவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்ப்பாட்டம் காரணமாக, மேற்படி வீதியின் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் மீனவர் வாடிகள் சில தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லை – செம்மலை, நாயாறு பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் 8 வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மீன்பிடிப்படகு ஒன்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் வாடிகளுக்குள் சிறுவர்கள், பெண்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்ததுடன், தீ பரவுவதை அவதானித்தவுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். Read more

எதிர்வரும் காலங்களில் அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுபிற்பகல் ரயில்வே தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். Read more

புத்தளம் பிரதேசத்தில் கடல் பகுதியில் கரையொதுங்கியுள்ள மருத்துவ கழிவு பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

புத்தளம் கடற்பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ளதாக அந்த அதிகாரசபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். Read more

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more