வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு போன்ற ஆசிய பசுபிக் கண்டங்களைச் சேர்ந்த 65 அமெரிக்க விமானப்படை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளும் இச் செயற்றிட்டத்திதை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பதில் அதிகாரி றொபட் ஹில்டன், இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாமினைப் பார்வையிட்டுள்ளார். இம் மருத்துவ முகாமில் பொது சுகாதாரம், பல் சுகாதாரம், குழந்தை மருத்துவம் மற்றும் பொறியியல் திட்டங்கள்,

பொருள் நிபுணர் பரிமாற்றங்கள் இலவச, மூக்குக்கண்ணாடிகள், ஏனைய நோய்களுக்கான மருந்துகள் என்பன பொதுமக்களை சோதனைக்கு உற்படுத்திய பின்னர் வழங்கி வருகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.