செஞ்சோலை படுகொலையின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 54 மாணவர்களும் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர்.
இந்த படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். Read more
பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு தடைகள் மீது கார் ஒன்று மோதியதில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் எவரும் உயிரிழக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேவர்லி தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இருவர் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மேலும் வலுச் சேர்க்கும் வகையில், ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், தலவாக்கலை- டயகம பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் மீனவர் வாடிகள் சில தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லை – செம்மலை, நாயாறு பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் 8 வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேசத்தில் கடல் பகுதியில் கரையொதுங்கியுள்ள மருத்துவ கழிவு பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.
யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.