2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பதிவு பட்டியலில் இணைக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் காட்சிப்படத்தப்படுகின்றது.

அனைத்து கிராம சேவகர், பிரதேச செயலகம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் இந்த பெயர்ப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதிவரை இந்த பெயர்ப் பட்டியல் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவை தொடர்பான முரண்பாடுகள் இருப்பின் அவற்றை சமர்ப்பிக் முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.