முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து இன்று முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது.
இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது என குற்றம்சாட்டி, முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். Read more
ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கட்ஸுயுகி நகானே இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிளிநொச்சி – ஊரியான் பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. ஊரியான் பகுதியை சேர்ந்த 23வயதான சியாந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மாணவனை காணவில்லையென தெரிவித்து நேற்று இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.