 கிளிநொச்சி – கரைச்சி பிரதேவ செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து, இன்றுகாலை 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – கரைச்சி பிரதேவ செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து, இன்றுகாலை 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்குப் பின்புறமாக உள்ள குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற இருவர், வயல் கால்வாயிலிருந்த சடலத்தைக் கண்டுள்ளனர். இதையடுத்து, இது தொடர்பில், பொலஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தின் முகப்பகுதியில் பாரிய காயம் இருப்பதுடன், உள்ளாடைகளுடன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும், சிலவேளை இது பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னரான கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.