 கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. நேற்றுமாலை 4.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை தவிர்த்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் குநித்த விபத்து எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.