Header image alt text

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என கூறியும் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா முன்றலில் திரண்ட மக்கள் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பான இப் போராட்டமானது தம்பர அமில தேரரின் உரையோடு ஆரம்பமானது. பௌத்த மத துறவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். Read more

ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத் திட்டங்களுக்கு அதிகசெலவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா செய்துள்ளார்.

இந்த அமைப்பின் தலைவராக பதவிவகித்து வந்த எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரபூர்வ பயணங்களுக்காக கிட்டத்தட்ட 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம், தனது மேற்பார்வையில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பணத்தைத் தான் செலுத்தியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

20வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்துள்ளார். இந்த காணி ஆவணங்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவர்கள் ஊடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசமைப்பின் 37.2 சரத்துக்கமைய பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், முப்படைகளினதும் கட்டளைத் தளபதி பொறுப்பு தனக்கு கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து Read more

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலருக்கு விளக்கமளித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், 14க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் ராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது தற்போதைய நிலைமை குறித்து முழுமையாக விளக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி நாடாளுமன்றின் ஊடாக தீர்த்துக் கொள்ளப்படவேண்டும். இந்த நிலைமை நீடிக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். Read more

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில் செய்யும் இவர், இந்த வீட்டிற்கு சென்று அங்கு உறங்கிய உள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதிக்குச் சென்ற நபர்கள் இவர் சடலமாக கிடப்பதைக் கண்டு யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். Read more

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாம்பல்தீவு, ஆத்திமோட்டை பிரதேசத்தில் நேற்று 1940 கிராம் TNT வெடிமருந்துகளுடன் 29 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த வேளையிலே வெடிபொருட்களை கைப்பற்ற முடிந்ததாக விஷத் தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். Read more

ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்வது தொடர்பிலான நடைமுறை ஒன்றை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம், ரயில்களில் யாசகம் பெறுவதற்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், சிலர் விதிமுறைகளை மீறி தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. Read more