Header image alt text

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

அதன்படி, திரு எஸ்.ஏ.சிசிரகுமார நீர்ப்பாசன நீர்வள இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் திரு சுனில் ஹெட்டியாராச்சி திறனாற்றல் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயாலளராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more

சிறீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் மத விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திருபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டோரின் பெயர்களை 4 மாதங்களுக்கு ஒரு தடவை வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்வதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த பெரும்பாலானோர், தமது 19 வயதிலேயே முதல் வாக்கைப் பதிவுசெய்கின்றனர்.

இதைத் தவிர்ப்பதற்காகவே, 4 மாதங்களுக்கு ஒரு தடவை 18 வயது பூர்த்தியடைந்தோரின் பெயர்களை இடாப்பில் உள்ளடக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில், உரிய தரப்பினரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.