Header image alt text

பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரையோ அமைச்சரவை அமைச்சர்களையோ ஏற்றுக் கொள்வதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று அவர் கூறியுள்ளார். Read more

ஒன்பது மாகாண சபைகளில், 6 மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைடைந்துள்ள நிலையில், விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொகுதி வாரி அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு, எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியடையாதுள்ள காரணத்தினால், மாகாண சபைத் தேர்தலை முன்னர் காணப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கமைய, 25 சதவீதம் அவசியம் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையிலான திருத்தச் சட்டத்தை மேற்கொள்வதற்கு, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா சமர்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இன்று பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் தேரர்கள், சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் முழுமையாக 90 வீடுகளும் பகுதியளவில் 18 வீடுகளும் சேதமடைந்துள்ளன. Read more