 அரசாங்க பாடசாலைகளுக்கான 3ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், இன்னும் பாடசாலை மாணவர்களுக்கான புதிய புத்தகங்கள், சீருடைத் துணிகள் வழங்கும் நிகழ்வு நிறைவடையவில்லையென கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அடுத்தாண்டுக்காக 39714000 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையால் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கல்வி வெளியீட்டு திணைக்களம் ஊடாக அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் உரை காணப்படுவதால், குறித்த புத்தகங்களை விநியோகிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லையென்றும் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.