இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் மற்றும் 1 உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு, 01-Mr. Petat Ljubicic – குரோஷியா குடியரசுக்கான தூதுவர்
02- Mr. Michael Nil Nortey Oquaye – கானா குடியரசுக்கான உயர்ஸ்தானிகர்
03- Mr. Andre Poh – கொங்கோ குடியரசுக்கான தூதுவர்
04- Mrs. Rita Giuliana Mannella – இத்தாலி குடியரசுக்கான தூதுவர்

(ஜனாதிபதி ஊடக பிரிவு)