நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முதலில் யோசனை கொண்டு வந்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில், இலங்கையில் இருந்து இடம்பெயர முயற்சித்த 30 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தென் கடற்பரப்பில் 80 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் இருந்த குழுவினர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொ மனுத் தாக்கல் செய்திருந்தார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை, குறித்த பதவியிலிருந்து நீக்க, அமைச்சரவை பத்திரமொன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேச சபையால் சிவனொளிபாத மலைக்கு பிரவேசிக்கும் வாயிலில் ‘சிவபாதம்’ எனப் பெயரிடுவதாக எடுக்கப்பட்ட முடிவை உடன் இடை நிறுத்தும்படி மத்திய மாகாண ஆளுநர் மைந்திரி குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.