2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 76 வாக்குகள் அளிக்கப்பட்டன.
கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைந்தது. அதற்கமையை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததடன், மக்கள் விடுதலை எதிராக வாக்களித்திருந்தது. Read more
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு சம்பந்தமான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் என்ஜின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல், சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பிரேம ரமணன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த 32 வயதுடைய பிரேம ரமணன் கடந்த 5ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.