பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் என்ஜின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல், சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினைக்காக தீர்வு, தங்குமிட பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை முதன்மைப்படுத்தியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதென, ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று ரயில்வே பொதுமுகாமையாளருடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.