புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள நாவலர் முன்பள்ளிக்கு 19,500 பெறுமதியான இரும்பு அலுமாரி ஒன்று வழங்கிவைப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அனுப்பிவைத்த நிதியிலிருந்து இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more
கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.
கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
2015 – 2018ம் ஆண்டு பகுதிகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை பதிவிடும் தினம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 5 மணியுடன் அதற்கான காலம் நிறைவடையவுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள், இன்று காலை முதல் ஸ்தம்பித்துள்ளன.
வவுனியா – ஈச்சங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் அகழ்விற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.