மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து இலங்கை சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை இல்ஙகை மீள புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. Read more
இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மித்ர சக்தி’ கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.
வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் நேற்று பிற்பகல் 1மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் யமுனா ஏரியைச் சேர்ந்த 79 வயதான சேது அன்ரனி என்பவரே உயிரிழந்தார்.
யாழ். அல்லைப்பிட்டி ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர், மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.