Header image alt text

கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

ஐ.நா இலங்கைக்கு கால அவகாசம் வழங்ககூடாது எனவும் சர்வதேச நீதி விசாரணையைக் கோரியும் கிழக்கு மாகாணத்தில் இன்றுஇடம்பெற்ற ஹர்த்தாலுக்கு வடக்கு மாகாணத்திலும் ஆதரவு கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், வடக்கில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அநேகமான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. Read more

கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அனைத்து பல்கலைகழக மாணவர்கள் அமைப்பினால் குறித்த பேரணி இன்றுபிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வேட் பிளேஸ் மற்றும் நகர மண்டபம் பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2015 – 2018ம் ஆண்டு பகுதிகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை பதிவிடும் தினம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 5 மணியுடன் அதற்கான காலம் நிறைவடையவுள்ளது.

தற்போது வரை குறித்த ஆணைக்குழுவிற்கு 950 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதற்கான காலம் கடந்த 14ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதன் காலம் இன்றுவரை நீடிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள், இன்று காலை முதல் ஸ்தம்பித்துள்ளன.

இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதுடன், அரச அலுவலகங்கள், அரச, தனியார் வங்கிகளும் இயங்கவில்லை. மேலும், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியா – ஈச்சங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் அகழ்விற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் நேற்று முன்தினம் இரவு 11.00மணியளவில் ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். Read more

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்’ பதவி நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம். கே. எம். மன்சூர் ஏலவே பணியாற்றி வந்த நிலையில், புதிதாக கிழக்கு ஆளுநராக நியமனம் பெற்ற ஹிஸ்புல்லாவினால் புதிய பணிப்பாளராக எம்.ரீ.நிசாம் நியமிக்கப்பட்டார். குறித்த நியமனத்துக்கு எதிராக எம்.கே.எம்.மன்சூரினால் ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த நியமனத்துக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த 5ம் திகதி இடைக்கால தடை விதித்தது. Read more

இலங்கை வந்துள்ள ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் யாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவித்தார். Read more

மன்னார் – தலை மன்னார் பிரதான வீதி, புதுக்குடியிறுப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில் இன்று மதியம் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு, அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் ஆண்டாங்குளம் ஆக்காட்டி வெளி கிராமத்தை வதிவிடமாகவும், மன்னார் சாந்திபுரம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட தனியார் பேரூந்தின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என தெரிய வருகின்றது. குறித்த குடும்பஸ்தர் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, Read more

கென்யாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற நான்காவது உலக சுற்றாடல் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கென்யா சென்றனர். இந்நிலையில், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 7.55 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.650 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்,

இலங்கை விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்பலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பேரணி இன்றுகாலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. Read more