Posted by plotenewseditor on 15 March 2019
Posted in செய்திகள்
துயர் பகிர்வோம்!
தமிழ் தகவல் நடுவம்(TIC) 1984ல் இந்தியாவின் தமிழகத்தில் சென்னை, மதுரை நகரங்களில் தனது காரியாலத்தை அமைத்து செயற்பட ஆரம்பித்த காலந்தொட்டு நண்பர் வை. வரதகுமார் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் எமது அமைப்பின் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனும் நானும் பெற்றிருந்தோம். தொடர்ந்து 1987 முதல் பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவம் செயற்படத் தொடங்கியதிலிருந்து இற்றைவரை இவருடனான எனது நட்பு தொடர்ந்தது.
எளிமையும் ஆழ்ந்த தமிழ் தேசியப்பற்றும் பழகுவதற்கு மிக இனிய சுபாவத்தையும் இயல்பாகவே தன்னகத்தே கொண்டிருந்த அவர் இலங்கையில் தமிழ் இனம் உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமான ஒரு இனமாக வாழவேண்டுமென்பதில் வேணவா கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அதற்காகவே தனது சிந்தனையையும் செயலையும் ஒருமுகப்படுத்தி தன் வாழ்நாழில் பெரும்பகுதியை கழித்தார். சகல தமிழ் விடுதலை அமைப்புக்களுடனும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது தொடர்பினைப்பேணிய அவர், தமிழகத்தில் தமிழ் தகவல் நடுவத்தினை சகல தமிழ் அமைப்புக்களும் தங்களுக்குள் தொடர்புகளைப் பேணவும் சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒரு களமாக பயன்படுத்த வழியமைத்தார். விடுதலை அமைப்புக்கள் ஒற்றுமையாக இலக்கினை நோக்கி பயணிக்கவேண்டுமென்ற அவரது முயற்சி இறுதிமூச்சுவரை தொடர்ந்ததாகவே இருந்தது ஒரு துரதிஸ்டம். Read more