முல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, அவரின் 15 வயதுடைய சகோதரி இந்த மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திலும் பலத்த மின்னல் மற்றும் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. Read more
வளர்ப்பு நாயால் அயலர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடால் ஏற்பட்ட கைகலப்பில் 3 பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சம்பவத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் ‘மில்லிநோகேட் ‘மற்றும் யு.எஸ்.எஸ் ‘இஸ்ப்ருவன்ஸ் ‘ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் வந்தடைந்தன.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார்.