கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சண்டை இடம்பெற்ற இடத்தில் இருந்து 15ய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறுவர்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்று மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர வீடொன்றில் இருந்து படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சண்டையை அடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொய் பிரச்சாரம் பரவுவதாகவும், எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.