படுகொலை செய்யப்பட்ட, பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். 
அமெரிக்கா நீதிமன்றத்திலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பாரென கூறப்படுகிறது.
		    
நிறைவுகாண் வைத்திய சேவைக்குட்பட்ட தாதியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தாதியர்கள் மற்றும் துணை வைத்திய சேவையாளர்களின் ஒன்றிணைந்த 16 தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். 
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றுமாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். அவர் தனது விஜயத்தின்போது இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 761வது நாளாக இடம்பெற்றது. 
இந்தியாவிலிருந்து இராணுவ கப்பலொன்று இரண்டு நாள்களுக்கான நட்புறவுக்கான சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டு, திருகோணமலை துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. 
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
யாழ். அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாகவுள்ள வெற்றுக் காணியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது, ஐக்கிய நாடுகளின் உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில, வெடித்துச் சிதறியுள்ளன. 10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனியார் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் நிலக் காணியில் இருந்த குண்டுகளே, இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளன.