Header image alt text

புதிய பிரதம நீதியராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று முற்பல் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதன்போது, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக தெரிவு செய்துள்ளது. இதனிடையே, புதிய கணக்காய்வாளர் நாயகமாக மேலதிக கணக்காய்வாளராக செயற்பட்ட சூலந்த விக்ரமரத்னவை நியமிக்கவும் அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த ஹேமசிறி பெர்ணான்டோ, நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பதில் பாதுகாப்புச் செயலாளராக, துசித்த வணிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் தாம் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார். Read more

சைனா ஈஸ்டன் விமான சேவை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் வாரத்திற்கு 4 முறை செயற்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை மே மாதம் 1ஆம் திகதி முதல் ரத்துச் செய்ய தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் , கொழும்பு மற்றும் பீஜிங் இடையிலான விமான சேவை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது. அதேபோல், சைனா சதர்ன் மற்றும் எயார் சைனா விமான சேவைகள் கொழும்பிற்காக தமது விமானப் பயணங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானத்தை செலுத்தி வருவதாக குறித்த விமான சேவை நிறுவனங்களின் உள்ளூர் முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, வெளிநாட்டு நபர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் விசாவினை பெற்றுக்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்டிருந்த புதிய முறைமை ஊடாக விமான நிலையத்திலேயே விசாவினை பெற்றுக் கொண்டு நாட்டினுள் பிரவேசிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. Read more

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரில்லா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கண்டியில், சந்தேகத்துக்குரிய கார் ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. Read more

மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாயார் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ள குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொட்ர்ந்து மேற்கொண்டு வந்த விசாரணையில், குறித்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக றில்வானின் உறவினர்களால் இவர் றில்வான் தான் என அடையாளம் காணப்படாமல் இருந்து வந்துள்ளது. Read more

மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமான பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டிடத்தில் நகைத் தொழில் செய்துவரும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

கொழும்பு, கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

அளுத்கம – தர்காநகர் பகுதியில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களின் நிழற்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தேடப்படுபவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தொடர்பில் அறியக்கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more