 மரண தண்டனையை மீள அமுலாக்குவதற்கு இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக கனடா தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை மீள அமுலாக்குவதற்கு இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக கனடா தெரிவித்துள்ளது. 
இலங்கையில் உள்ள கனேடிய தூதரகம் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா விடயங்களிலும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதை தாங்கள் கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் எதிர்ப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.