ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில்,
வவுனியா மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக நீர்நிலைகளில் மீனினங்கள் இறந்து கரையொதுங்குகின்றமையை காணமுடிகின்றது.
நாளை நள்ளிரவிலிருந்து இரு நாள்களுக்கு ரயில் பணிப்புறக்கணிப்பை முன்னெப்பதற்கு, 5 ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
யாழ். கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.