தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் அண்மையில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு கல்வி பொது தராதர சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தே பரீட்சைகளை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
உலக பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு, இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க ஜப்பான் தயாராகவுள்ளதாக , ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டொஷிகோ அபே தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று, மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோஹ்லி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கைப் பிரதிநிதிகள் இருவர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர், இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அதிகாரம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலையை தற்போது வரையில் வழமைக்கு திரும்பவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா 06.06.2019 வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.