நீதிமன்ற உத்தரவை அவமதித்து, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் சடலத்தை தகனம் செய்து. ஆலயத்தில் வீண் சச்சரவுகளை ஏற்படுத்தி அடாவடித்தனமாக நடந்துகொண்ட பொதுபலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரவைக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)வின் ஏற்பாட்டில் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் என். சிறீகாந்தா, புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் நகரசபை, பிரதேசசபை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more
யாழ் கட்டப்பிராய் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய களஞ்சிய அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
யாழ். கூழாவடி ஆனைக்கோட்டை சிறுவர் பூங்காவின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வலிதென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஜெபநேசன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தாலும் இன்றும் 12 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. கம்பஹா, பொல்கஹவெல, மஹவ உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொழும்பு கோட்டை வரை குறித்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சேவகர்களும் எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
2019 ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி நாளையுடன் நிறைவடைகின்றது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும்.
சம்பள முரண்பாட்டை முதன்மையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே சாரதிகளின் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றில் இருந்தே இவ்வாறு சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.