தேர்தல் தொடர்பான பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது இன்று முதல் தடைசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கமைய இன்று முதல் பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது தடைசெய்யப்படுவதாக அவர் கூறினார். Read more
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பௌத்த விகாரை அமைப்பதோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நீதிமன்ற மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சருமான சட்டத்தரணி பெடீ வீரகோன் இன்று காலமானார்.
நாளை நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைகின்றது.
வவுனியா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தமையால் பதட்டமான சூழ்நியொன்று ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் தொடர்பாக முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகியுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
கறைபடாத கரங்கள் துடிப்பான தலைவன் தன் தந்தை வழியில் பயணிக்கும் தூர நோக்கு கொண்ட இலங்கையின் அனைத்து மக்களுடைய இதய துடிப்பையும் உணர்ந்த ஒரே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது சஜித் பிரேமதாச மட்டுமே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.