ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் பணிகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றின் நிமித்தம் காரணமாகவே ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா (Akira Sugiyama) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா, குறித்த கட்டடப் பணிகளைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய கடந்த 09 நாட்களில் 762 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 733 முறைப்பாடுகள் இதில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2016 மற்றும் 2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்கள் 8000 பேர் நாடளாவிய ரீதியிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையை இன்றுமுற்பகல் 10மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 623 குடும்பங்களைச் சேர்ந்த 2183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
யாழ். தீவகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக அதிகரிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற பெயரில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.