கனடாவிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு பொறுப்பாளராக க.கந்தசாமி, உதவிப் பொறுப்பாளராக க.விஜயசேகரன் (சங்கர்),
நிதிப் பொறுப்பாளராக பா.கிருபாகரன், ஊடகத் தொடர்பாளராக ச.பாஸ்கரன், இணைப்பாளராக செ.குணபாலன் ஆகிய தோழர்களும், அங்கத்துவ நடவடிக்கைப் பொறுப்பாளர்களாக சார்ள்ஸ் ஜோசேப், விஜயரட்ணம் விஜிதரன், தி.அருண், பிரதீபராஜ் ஜிந்துஜா ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர், வவுனியா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரையும், கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு நேற்று முன்தினம் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக மீண்டும் அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் கரைச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இராணுவத்தினர் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது.
ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளமைக்கு பௌத்த மதகுருமார்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.