ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2540 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2425 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் மற்றும் 92 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 147 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்திருப்பதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கல்யாணி லியனகே தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே சின்னம் தொடர்பிலும் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பிலும் மக்கள் மத்தியில் குழப்பம் அல்லது தெளிவின்மை காணப்படுகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு தவணைக் கடன் தொகையொன்று இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரட்டை கப் வாகனம் அல்லது டபிள் கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி நேற்று முதல் நீக்கப்படுகின்றது. நேற்று முதல் சம்பந்தப்பட்ட வரி சொகுசு மோட்டார் வாகனம் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாத்திரமே அறவிடப்படும்.