கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிலுள்ள தட்டுவன் கொட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 11 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரண்டு சர்வதேச உதவி மாநாடுகளை நடத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றுமுற்பகல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை பிற்ஸ் எயார் (Fits Air)) விமான நிறுவனத்தின் விமானம் முதலாவதாக கொழும்பு இரத்தமலானை விமான நிலையத்தில் இருந்து சென்றது.
வாக்காளர்களில் 3 இலட்சம் பேருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டில் ஒருமித்த நாட்டில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி ஒரே குடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரு சட்டத்தின் கீழ் வாழக்கூடிய ஒரு எதிர்கால அரசாங்கத்தை நான் உருவாக்குவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச தெரிவித்தார்.