கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (14) நிறைவு செய்துகொண்டுள்ளார்.கடந்த 10ஆம் திகதி முதல், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டிருந்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில், பொலிஸாரின் தெளிவுப்படுத்தலுக்கு அமைய அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார்.