இந்தியாவிற்கு இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இந்த சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் சகல சமுகங்களும் சமமாக நடத்தப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய ராஜ்யசபாவில் நேற்று உரையாற்றுகையில் கூறியுள்ளார்.