பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் நேற்று மாலை சந்தித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் கமல் குணரத்ன, அலரிமரிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின்போது, பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு  கலந்துரையாடலை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.