இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமது அரசாங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, புதிய நோக்குடன் முன்னோக்கி செல்வும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் மிக உயர்ந்த ஆதரவை வழங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார். Read more
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் – சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று நாடாளுமன்றில் சந்தித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தின் இணைப்பு அதிகாரிக்கும் விசாரணை அதிகாரிக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலய இணைப்பதிகாரி ரோஹித்த பிரியதர்ஸன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ளத்தில் குறித்த கார் சிக்குண்டது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 734 பேரும், 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வருகின்ற தொடர் மழையினால் 8 பிரதேச செயலகங்களில் 18 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 164 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையம் இன்று நீரில் மூழ்கியுள்ளதாக கிளிநொச்சி இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சாப்தீனின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரியுள்ளார்.