உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் என சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டோரை சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வேறுவேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. Read more
தனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை அறிமுகப்படுத்தப்படுமென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரக காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு இராணுவ தலைமையத்தில் புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உலக மனித உரிமைகள் தினமான இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மல்லாவியில், இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 25 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அனைத்து தேர்தல்களிலும் தேவையற்ற வகையில் களமிறங்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பாராளுமன்றத்தினால் அதனுடன் தொடர்புடைய சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி 3 ஆவது நாளாக தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித மேம்பாட்டு குறிக்காட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
வவுனியா சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரழந்துள்ளார்.