13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேலும் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கான தேவைகள் மற்றும் அதனை எவ்வாறு முன்னோக்கி கொண்டுசெல்வது? அதனை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்பவில்லையாயின் அதற்கான காரணங்களை ஆராய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொது விவாதத்தின்போது ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மென்டிஸ் அளித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். அவர்களை அரச சேவையில் உள்ளீர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மூன்று வகைகளாக வகைப்படுத்துவதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக உள்ளுரில் உற்பத்தி செய்யக்கூடிய அல்லது தயாரிக்க கூடிய அத்தியாவசியம் அல்லாத பொருட்கள், வர்த்தக பொருட்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுத்தப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட இருவரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸ் ஆகியோரை ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் இது தொடர்பான உத்தரவு இன்றையதினம் (17) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் கீழ் உள்ள புதிய பஸ் தரிப்பிடத்தில், மன்னார் மாவட்ட தனியார் பஸ் சேவை மற்றும் இலங்கைப் போக்குவரத்து பஸ் சேவைகள் என்பன இணைந்த சேவையாக மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு, நேற்று மாலை தீர்வு எட்டப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில், நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கால் பகுதி எலும்புத் துண்டுகள், சீருடைகள், பற்றிகள் ஆகியன நேற்று (16) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு, பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா – ஓமந்தைப் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து விவசாயின் வீட்டுக்குள் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை சேதப்படுத்தியதுடன், வீடு பயன் தரும் மரங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக, வீட்டின் உரிமையாளாரால் அதிகாரிகளிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயார் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கடந்த 15 ஆம் திகதி இரவு மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக 42 நாள் கொண்ட ´கோஷனி´ என்ற சிசு சடலமாக மீட்கப்பட்டார்.