இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுடன் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். Read more
புதிய இராஜதந்திர அதிகாரிகளாக பெயரிடப்பட்டிருந்த 8 பேரை அந்தப் பதவிகளுக்கு நியமிக்க பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, C.A சந்திரபிரேம ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும் S.அமரசேகர தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும், ஓய்வுபெற்ற அட்மிரல் K.K.V.P. ஹரிஸ்சந்திர சில்வா ஆப்கானிஸ்தானுக்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான இரு கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தொடர்புகளின் வரலாற்றுக்கு கொழும்பு துறைமுகம் நேரடி நினைவுச்சின்னமாகும். அந்த நினைவுகளை புதுப்பித்து ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான JS Kaga மற்றும் JS Ikazuchi ஆகிய கப்பல்கள் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செப்டம்பர் 23ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
மட்டக்களப்பு வெருகல் ஆற்றை இன்றுகாலை தோணியில் கடக்க முற்பட்ட ஒருவர் தோணி கவிழ்ந்ததில், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேருநுவரவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வருகை தந்த 6 பேருக்கும், உக்ரேனில் இருந்து வருகை தந்த 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து வருகை தந்த இருவருக்கும், அல்பீனியாவில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,345 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் முஹம்மது சப்தார் கான் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக நேற்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகரை வாழ்த்திய கடற்படை தளபதி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான பரஸ்பர நலன்களைப் பற்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியா வைத்தியசாலையின் விடுதி இல.01 இல் போதிய இட வசதிகள் இன்மையால் நோயாளர்கள் விடுதிக்கு வெளியே நடைபாதையில் படுத்துறங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றானது (01) காயங்கள் மற்றும் சிறுநீரகம் சார்ந்த சத்திர சிகிச்சைக்குள்ளாக்கப்படும் நோயாளர்களிற்கு சிகிச்சை வழங்கும் பகுதியாக செயற்பட்டு வருகின்றது. குறித்த விடுதிக்குள் அண்ணளவாக 40 கட்டில்களே போடப்பட்டுள்ளன. அதனைவிட அதிகமான கட்டில்களை போடுவதற்கு அவ்விடுதியில் இடவசதி இல்லாதநிலை காணப்படுகின்றது.
இலங்கையின் ஜனநாயகத்துக்கு சாவு மணியடிக்க தயாராக இருக்கும் அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி எதிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவு நிறைவேறினால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்கள் சிதைவடையும். நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரங்கள் குவியும்.
மாத்தறை பொல்ஹேன பிரதேச சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. இந்த நபர் உட்பட ரஷ்ய நாட்டவர்கள் 15 பேர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி மத்தல விமானநிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். அவர்கள் நேற்று ரஷ்யா திரும்பவிருந்த நிலையில் மாத்தறை தனியார் வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ டீ லக்ஷ்மனினால் நேற்று புதிய நாணயத்தாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்புஇடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.