நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநே­க­மானோர் காணாமல்போயுள்­ளனர். இவ்­வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்­கையை பரி­சீ­லிக்கும் போது ஆசி­யாவில் மாத்­தி­ர­மன்றி,

உல­க­ளா­விய ரீதி­யி­லேயே அதி­க­மானோர் காணாமல் போயுள்ள நாடாக இலங்கை உள்­ளது. முன்­னைய ஆணைக்­கு­ழுக்­களின் மூலம் பெறப்­பட்ட தர­வுகள் மற்றும் தற்­போது பெறப்­பட்­டுள்ள தர­வு­களின் அடிப்­ப­டையில் இரு­ப­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் காணாமல் போயுள்­ளனர் என்று காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரி­வித்தார்.
காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான சர்­வ­தேச தினத்தை முன்­னிட்டு எதிர்­வரும் 30ஆம் திகதி காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது. அந்­நி­கழ்வு தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் வகை­யி­லான ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று வியா­ழக்­கி­ழமை காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­தினால் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அச்­சந்­திப்பின் போதே சாலிய பீரிஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

காணா­மல்­போனோர் அலு­வ­லகம் எதிர்­வரும் 30ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள நிகழ்வு தொடர்­பாக அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான சர்­வ­தேச தினத்தை முன்­னிட்டு காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்­நி­கழ்வில் மனித உரிமை ஆணை­யாளர் தீபிகா உட­கம விசேட உரை­யாற்­ற­வுள்­ள­துடன், காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இந்த நிகழ்வு ”காணா­மல்­போதல் இனி நிக­ழக்­கூ­டாது’ எனும் தொனிப்­பொ­ருளில் இடம்­பெ­ற­வுள்ள அதே­வேளை, காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­யொன்றும் வெளி­யிட்டு வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இது ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் கைய­ளிக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­வரை காலமும் காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நடத்­தி­யி­ருந்த மக்கள் சந்­திப்­புக்­களில் இருந்தும், சிவில் சமூக அமைப்­புக்­க­ளு­ட­னான சந்­திப்­புக்­களில் இருந்தும், காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் அனு­ப­வங்­களில் இருந்தும் ஆரா­யப்­பட்டுக் கண்­ட­றி­யப்­பட்ட பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கி­ய­தாக மேற்­படி அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­றிக்­கையில் குறிப்­பாக காணா­மல்­போ­னோரின் குடும்­பங்­க­ளுக்­கான நிவா­ர­ணத்­தொகை, உண்­மையைக் கண்­ட­றிதல் மற்றும் காணா­மல்­போ­னோரின் குடும்­பத்­தி­ன­ருக்­கான நீதியைப் பெற்­றுக்­கொ­டுத்தல் ஆகிய விட­யங்கள் தொடர்பில் பரிந்­து­ரைகள் இடம்­பெற்­றுள்­ளன.

2018 ஆம் ஆண்டில் காணா­மல்­போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­ட­துடன், வலிந்து காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காக்கும் சட்­டமும் நிறை­வேற்­றப்­பட்­டது. எனவே காணா­மல்­போதல் தொடர்பில் முக்­கிய செயற்­பா­டுகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள இவ்­வாண்டில், இனி­மேலும் காணா­மல்­போதல் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்த வேண்டும் எனும் நோக்­கி­லேயே இந்­நி­கழ்­வினை ஏற்­பாடு செய்­துள்ளோம் என்றார்.

காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது மக்கள் சந்­திப்­புக்கள் மூலமும், முன்­னைய ஆணைக்­கு­ழுக்­களின் மூலமும் காணா­மல்­போனோர் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எதிர்­வரும் மாதங்­களில் அலு­வ­ல­கத்­திற்­கான விசா­ரணை அதி­கா­ரி­களை நிய­மிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அத்­தோடு காணா­மல்­போ­யுள்ள நபரின் குடும்­பத்­திற்­கான சான்­றி­தழை வழங்கும் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும், காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் அதனைப் பெற்­றுக்­கொள்­வதில் கூடிய கவனம் செலுத்­த­வில்லை. மாறாக தமது உற­வு­க­ளுக்கு என்ன நிகழ்ந்­தது என்­பதே அவர்­களின் கேள்­வி­யாக உள்­ளது.

மேலும் காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுவதில் தடைகளை விட சவால்களே அதிகமாக உள்ளன. காரணம் இது சுயாதீன ஆணைக்குழு எனும் போதும், அலுவலகம் சில கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

அத்தோடு காணாமல்போனோர் அலுவலகத்திற்கு இவ்விடயம் தொடர்பில் செயற்படத்தக்க சிறப்புத்தேர்ச்சியும், தொழில்நுட்ப ரீதியான தேர்ச்சியும் உள்ள சர்வதேச அதிகாரிகள் இருப்பார்களாயின் அவர்களையும் அலுவலகத்தில் இணைத்துக்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார்.