 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும் அமெரிக்க குடிமகன் என்று பரவிவரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.