Header image alt text

24 வருடங்களின் பின் யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை-

yaldeviyaal_deevi_00624 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் முதலாவது அனுமதிசீட்டு கொள்வனவுடன் இன்று முற்பகல் 10 மணிக்கு பளையிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட ரயில் 11.15மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த பயணத்தின்போது கொடிகாமம் மற்றும் நாவற்குழி தொடரூந்து நிலையங்களின் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஆரம்பித்து வைத்தார். ரயில் கட்டணமாக முதலாம் வகுப்புக்கு 1500 ரூபாவும், இரண்டாம் வகுப்புக்கு 800 ரூபாவும், மூன்றாம் வகுப்புக்கு 320 ரூபா அறவிடப்படவுள்ளது.

 வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் விசேட போக்குவரத்து-

wellawatte marine driveகொழும்பு வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் இன்றுமுதல் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நெல்சன் வீதியிலிருந்து சார்லிமன்ட் வீதி வரையான மெரைன் ட்ரைவ் வீதி ஒருவழிப் பாதையாக செயற்படுத்தப்படுகின்றது. வார நாட்களில் காலை 7மணி தொடக்கம் காலை 9.30 வரை குறித்த வீதியில் கொழும்பை நோக்கி மாத்திரமே வாகனங்களை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிற்பகல் நான்கு மணி தொடக்கம் மாலை 6.30 வரை வெள்ளவத்தையை நோக்கி மாத்திரம் குறித்த வீதியில் வாகனங்களை செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீதிப் புனரமைப்பு காரணமாக இந்த விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளையின் விசாரணை ஜனவரியில் நிறைவு-

navipillaiyin visaaranaiஇலங்கைமீதான நவநீதம்பிள்ளையின் யுத்தக்குற்ற விசாரணை ஜனவரியில் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றம் மற்றும் காணாமல்போனோர் தொடர்பில், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கை தயாரிப்பரென ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின்போது இவ்வறிக்கை கையளிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கடந்த வாரம் ஜெனீவாவில் ஒன்றுகூடி ஆராய்ந்தும் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

வடமாகாணசபை வைக்கோல் பட்டடை நாய் ஜயாதிபதி

முட்டாள் விக்னேஸ்வரன் கிண்டல் டக்களஸ் தேவானந்தா

mahinda_bodhi_002வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போகும் வழியில் இன்று அனுராதபுரத்தில் மஹா போதி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டடு அங்குள்ள புனித போதி மரத்தை வழிபட்டார். இதன் பின்னர் கிளிநொச்சி புறப்பட்டுச் சென்றார்.

இலங்கையின் வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன். புலிகள் நடத்திவந்த வங்கியில் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு தொகுதியை உரிமையாளர்களான 25 பேரிடம் கையளித்துள்ளார்.

புலிகள் கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு நடத்திவந்த நிர்வாகத்தில் நடத்திய வங்கியில், அரச mahinda_kilinochchi_002வங்கிகளைப் போன்று சேமிப்பு, தங்க நகை அடகு வைத்தல், கடன் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இறுதி யுத்தத்தின்போது அந்த வங்கியில் இருந்த நகைகள், ஆவணங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தன. ஆயினும், அந்த தங்க நகைகள் பற்றிய விபரங்கள் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்த mahinda_kilinochchi_005நிலையிலேயே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை ஐந்து ஆண்டுகளின் பின்னர் உரியவர்களிடம் வழங்குவதாகக் குறிப்பிட்டு, 25 பேருக்கு தங்க நகைகளை வழங்கியிருக்கின்றார். அத்துடன் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 1,218 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக 115 மில்லியன் ரூபாவையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

mahinda_kilinochchi_004புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கான அரச செயலகக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். ‘வட மாகாணசபை வைக்கோல் பட்டடை நாய்’ ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் விசேடமாக mahinda_kilinochchi_017அமைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ, வபுலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றி, முப்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். பயங்கரவாதிகளுக்கும் பயங்கர ஆயுதங்களுக்கும் எதிராகவே நாம் போராட்டம் நடத்தினோம். உங்களுடைய எதிர்காலத்துக்காகவும் உங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவுமே நாம் போராட்டம் நடத்தினோம். 2009 மே 19ஆம் திகதி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் நீங்கள் விமோசனம் பெற்றுள்ளீர்கள். உங்களுடைய பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கியிருந்த நீங்கள், இப்போது அதிலிருந்து மீண்டுள்ளீர்கள். போர்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள் காரணமாக நீங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளீர்கள். இப்போது அந்த ஆபத்து இல்லை.

mahinda_kilinochchi_006அவர் மேலும் உரையாற்றுகையில்:- அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்திருந்தும் தேர்தலை நடத்தியதாகவும், ஆயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் போதிய அளவு நிதியை வழங்கியுள்ள போதிலும், அதனை மக்களுக்குப் பயன்படுத்தத் தவறியுள்ளதுடன், அரசாங்கமாகிய தாங்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களையும் அவர்கள் செய்ய விடுவதில்லை என்றும் குற்றம் சுமத்தினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ‘வைக்கோல் பட்டடை நாயைப் போன்று’ மக்களுக்குரிய நலத் திட்டங்களைத் தாங்களும் செய்யாமல் மத்திய அரசையும் செய்யவிடாமல் தடுத்திருப்பதாக அவர் சாடியிருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழீழ அரசாங்கம் பற்றி குறிப்பிட்ட அவர், அவர்களுடன் எதிர்க்ட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்று பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகத் தெரிவித்ததுடன், இந்த நாட்டில் தனிநாடாக ஈழம் அமைப்பதையோ, நாட்டைப் பிரிப்பதையோ ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே, வடபகுதி மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, ஒன்றுபட்ட நாட்டில் வாழ முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முட்டாள் விக்னேஸ்வரன் கிண்டல் டக்களஸ் தேவானந்தா

mahinda_kilinochchi_013மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு அழைத்தோம். அவர் வருகை தருவார் என நினைத்தோம். ஆனால் வரவில்லை. மு விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூறவந்தேன். நீங்கள் அப்படி நினைத்தீர்களா? என அமைச்சர் டக்ளஸ் நையாண்டி செய்து சிரித்தார். டக்ளஸ் தேவானந்தா, மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனை நையாண்டி செய்து நகைத்துச் சிரித்தது அரசியல் கோமாளித்தனமும், நாகரீகம் அற்ற செயலும், அறிவீலித்தனமும் என பலரும் விசனப்பட்டுக் கொண்டனர்.

கொழும்பு கரையோரப் பகுதிகளில் விஷேட போக்குவரத்துத் திட்டம்-

Colombo karaiyora paguthikalilவெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிகளில், நாளை முதல் விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார நாட்களில் மாத்திரம் மீள அறிவிக்கப்படும் வரை இந்நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி காலை 07.00 மணி முதல் 09.30 வரை வெள்ளவத்தை கடற்கரைப் பகுதிகளில் நெல்சன் வீதி சந்தியிலிருந்து சார்லிமன்ட் சந்திவரை கொழும்பு நோக்கி மட்டும் வாகனப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது. அதேபோல் மாலை 04.00 மணிமுதல் 06.30 வரை வெள்ளவத்தை கடற்கரை வீதியின் சார்லிமன்ட் சந்தியில் இருந்து நெல்சன்வீதி சந்தி வரை தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரச விடுமுறை தினங்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்நடவடிக்கை நடைமுறையில் இருக்காதென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய தேருக்கு தீவைப்பு-

unnamedவவுனியா, இறம்பைக்குளம், n ஹாரோவப்பத்தானை வீதியில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் கதவு திறந்திருப்பதையும் அங்கிருந்து புகை வருவதையும் பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்கு இன்று அதிகாலை வந்தவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில், தேர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, தேர் எரிந்து கொண்டிருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக தண்ணீரினால் தீயை இவர்கள் அணைத்தபோதிலும், தேரின் கீழ்ப்பகுதி எரிவடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

அவுஸ்திரேலிய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு-

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று கடந்த தினம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பேர்த்தில் வைத்து அவுஸ்திரேலிய அமைச்சர் ஜுலி பிஷப்பை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போது இலங்கையிலிருந்து அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதவாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அகதிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. இந்நிலைமையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தைகளில் அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ் ஆசனங்களை முன்பதிவு செய்ய புதிய முறை-

தெற்கு அதிவேக வீதி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், கையடக்கத் தொலைபேசிமூலம் ஆசனங்களைப் முன்பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 21ம் திகதிமுதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி கண்டியிலிருந்து காலி வரையான பயணிகள் போக்குவரத்து பஸ்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பயணத்தை ஆரம்பிக்க இரு வாரங்களுக்கு முன் தொடக்கம் ஒரு மணித்தியாலங்களுக்கு முன்வரையான காலப்பகுதியில், 365 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன்மூலம் ஆசனங்களைப் பதிவு செய்ய முடியும்.

ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும்-

யாழ். சுன்னாகம், கந்தரோடை, ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலையின் நிறுவுநர் நினைவு தினமும், 04ஆவது பரிசளிப்பு விழாவும் 1ஆவது சிறப்பு மலர் வெளியீடும் 10.10.2014 வெள்ளிக்கிழமை நேற்று பிற்பகல் 1மணியளவில் யாழ் ஒறேற்றர் மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திரு.வ.நந்தீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆசியுரையினை ஸ்கந்தன் ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ இ.சோமேஸ்வரசர்மா அவர்கள் வழங்கியதுடன், பிரதம விருந்தினராக ஸ்கந்தாவின் கொழும்பு பழைய மாணவர் சங்க உபதலைவர் டொக்டர் அ.சக்திவேல் அவரகளும், சிறப்பு விருந்தினராக உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி தி.தர்மலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் இளைப்பாறிய பிரதிஅதிபர் திரு.கனக. புவனேந்திரநாதன் அவர்கள் நினைவுப் பேருரையாற்றினார். திருமதி.க.சக்திவேல் அவரகள் பரிசில்களை வழங்கிவைத்தார். வெளியீட்டுரையினை இளைப்பாறிய இசைஆசிரியர் திரு.சி.சிவஞானராஜா அவர்கள் வழங்க, செல்வி வை.சாவித்திரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் சச்சி காலமானார்-

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை சச்சிதானந்தம் நேற்று முன்தினம் காலமானார். சச்சி ஐயா என அழைக்கப்பட்ட அவர், 1950ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தீவகம் – ஊர்காவறறுறையில் பிறந்தார். ஊடகத்துறைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனித்து வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழநாடு மற்றும் தினக்குரல் போன்ற பத்திரிகைகளின் ஊடகவியலாளராகவும், விநியோக முகாமையாளராகவும் சச்சிதானந்தம் அவர்கள் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். அவரின் இறுதிக்கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளது.

பொது வேட்பாளர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்-

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு முன்வைக்கின்ற தீர்வுத் திட்டங்களின் அடிப்படையிலேயே, எதிர்வரும் தேர்தல்களில் எந்த தரப்புக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம், அதனோடு தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் போன்றவற்றுக்கு வேட்பாளர்கள் வழங்குகின்ற முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி கூறியுள்ளார்.

சத்தியாக்கிரகம் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல்-

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுள்ள இடத்திற்கு சிலர் தீ வைத்துள்ளதோடு, குறித்த மாணவர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவ சங்க அமைப்பாளர் ரசிந்து ஜெயசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் காரணமாக 12 மாணவர்கள் மற்றும் இரு பிரதேசவாசிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எது எவ்வாறிருப்பினும் நேற்று இரவு 11.30 அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் நால்வர் சிகிச்சைபெற்று வெளியேறியுள்ளதாகவும், அறுவர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மூன்று கடைகள் தீக்கிரை-

யாழ். கொடிகாமம் பொதுச் சந்தையில் உள்ள மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. சாவகச்சேரி பிரதேச சபைக்குச் சொந்தமான மூன்று கடைகள் நேற்றிரவு 8.30 அளவில் தீக்கிரையானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடைகளுக்கு தீ மூட்டியவர்கள் பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். எனினும், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. பொதுச் சந்தையிலுள்ள புடவைக்கடை, பனை உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் என்பன தீயினால் முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை பாலத்தோப்பூரில் பிள்ளையார் சிலை உடைப்பு-

திருகோணமலை மூதூர் பாலத்தோப்பூர் முருகன் கோயிலில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத சிலரால் நேற்றிரவு பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் இதுவரை முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விமான சேவைகள் தாமதம்-

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக விமான சேவைகள் தாமதம் ஏற்படும் என்று விமான நிலையத்தின் குடியகல்வு குடிவரவு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதி சந்திப்பு-

03(638)இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்;டு இங்கு வருகை தந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராதாகிருஸ்ண மத்தூர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இன்றுகாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடாத்திய சந்திப்பின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது, இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது இரண்டு நாடுகளின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பு-

ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதியின் 2ஆவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இந்நிலையில் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு, இவ்வருடம் நவம்பர் 18ஆம் திகதி பூர்த்தியாகிறது. நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர், தேர்தல் அறிவிப்பு விடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி ஒருவர் பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ல் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்-

Vavuniya vil kavana eerppu porattam (3)Vavuniya vil kavana eerppu porattam (2)Vavuniya vil kavana eerppu porattam (5)Vavuniya vil kavana eerppu porattam (1)நீண்ட காலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியை விடுவிக்க கோரி வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் வவுனியா நீதிமன்ற வளாகம் வரை சென்றபோது, நகரசபை பிரதான விதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். எனினும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் சென்றமையினால் அவர்களை நீதிமன்றம்வரை செல்ல பொலிஸார் அனுமதித்திருந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்திற்கு முன்பாக கூடியவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியாக சிறிது நேரம் நின்றதன் பின்னர் மீண்டும் நகரசபை மைதானத்தை வந்தடைந்தனர். இதன்போது ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும், நிபந்தனை இன்றி அரசியல் கைதிகளை விடுதலை செய், தாயையும் மகளையும் பிரிக்காதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டும், எமது வாழ்வு எமது கைகளில் அந்நியரிடமில்லை, போடாதே போடாதே பெய் வழக்கு போடாதே போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர். இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், ஈ.சரவணபவன், வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், தென்னிலங்கை மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாதிரிமார், காணாமல் போனோரின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மலையக கட்சிகளையும் சந்திக்கவிருப்பதாக கூட்டமைப்பு தெரிவிப்பு-

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவிருந்தும் இறுதி நேரத்தில் அது பிற்போடப்பட்டிருந்தது. மீண்டும் அந்த பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிக்கப்படுகின்ற போதும், அதற்கான திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த இணக்கப்பாடை ஏற்படுத்திக் கொள்வதற்காக, இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பை சக்திமயப்படுத்தும் நோக்கில் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் நடத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் இரு பிரேரணைகள் நிறைவேற்றம்-

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு தொடர்பான விசேட அமர்வு வட மாகாண சபையில் நேற்று இடம்பெற்றது. மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நேற்றைய விசேட அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. காணி சுவீகரிப்பு தொடர்பாக வடமாகண முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அதன் பின்னர் மாகாண சபை உறுப்பினர்களும் வாதங்களை முன்வைத்தனர். 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் காணி அதிகாரத்தை நடைமுறைபடுத்துமாறும், வருட இறுதிக்குள் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியேற்றுமாறும் கோருகின்ற இரண்டு தீர்மானங்களும் நேற்றையதினம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து வட மாகாண சபையின் அமர்வுகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு சபைத் தவிசாளரால் ஒத்திவைக்கப்பட்டது.

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு-

ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே நிலையப் பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நிதியமைச்சின் செயலருடன் நேற்றுமாலை இடம்பெற்ற அவசர பேச்சுவார்தையின்போது, இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக 14 நாட்கள் காலஅவகாசம் கோரப்பட்டதாக ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் ஜானக பெர்னாண்டோ கூறியுள்ளார். ஆயினும், நிதியமைச்சின் செயலரின் கோரிக்கைக்கு ஒன்றிய பிரநிதிகள் உடன்படாத நிலையில், தமது பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடுவதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை இன்று வழங்குமாறு நிதியமைச்சின் செயலரிடம் கோரியுள்ளதாக ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றிய ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தினத்திற்குள் தங்களின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தமது சங்க பிரதிநிதிகளுடன் இன்றுமுற்பகல் பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கூறியுள்ளார்.

அகதி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

அவுஸ்திரேலியாவின் அகதிக் கொள்கையை எதிர்த்து நாளை அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அகதிகள் செயற்பாட்டு குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன இலங்கையிலிருந்து சென்ற அகதிகளை நவுரு மற்றும் மானஸ் தீவுக்களில் தங்கவைத்தல் மற்றும் புதிதாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டமும், பாரிய மனித உரிமை மீறல் செயலாகும். இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அகதிகள் செயற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்து நாளை சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக அவ் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதியில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் கைத்துப்பாகியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை முதலாம் பிரிவை சேர்ந்த ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், மகசீன் ஒன்றும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை சம்மாந்துறை நீதவான் நீதுமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரயில் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு நீதிமன்றம் தடை உத்தரவு-

ரயில் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனு ஒன்றை பரிசீலித்த பின்னர் நீதிமன்றத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரிக்கை-

சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன அமுலாக்கத்தை கண்காணிக்கும் ஐ.நா நிபுணர்கள் குழுவினது மாநாட்டில், இலங்கை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் இம்மாநாட்டில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன. தீர்க்கப்படாதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், காணாமல் போதல்கள், தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், சர்வதேச அமைப்புகள் தாக்கல் செய்திருந்த அறிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் 48 மணித்தியாலத்துக்குள் தங்களின் விளக்கத்தை முன்வைக்குமாறு, மனித உரிமைகள் குழு இலங்கையின் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தது. இதன்படி இன்று பெரும்பாலும் இதற்கான விளக்கத்தை இலங்கைப் பிரதிநிதிகள் முன்வைப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

புராதன பெறுமதி பொருட்களுடன் புளியங்குளத்தில் இருவர் கைது-

புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த இரண்டு பேர் வவுனியா – புளியங்குளம் பகுதியில் வைத்து அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஆட்டோவை புளியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதனைச் சோதனை செய்துள்ளனர். இதன்போது குறித்த ஆட்டோவிலிருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புளியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண சபைக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்-

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் வடமாகாண சபைக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இழுவைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றினார். பின்னர் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வு காணப்படுமென முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இதனால் மீனவர்கள் தமது அர்ப்பாட்டத்தினை நிறைவு செய்தனர். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் வாக்குறுதியினை நிறைவேற்ற தவறினால், மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

மஹிந்த போட்டியிட்டால் நான் போட்டியிட மாட்டேன்- சரத் பொன்சேகா-

untitledநடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்வதாகவும், அதற்காக கிடைக்கப்பெறும் விருப்பங்கள் மிகவும் பலமானதாக அமைந்திருக்கவேண்டும் என்றும் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும்படி தன்னிடம் ஐ.தே.கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின், நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம். காரணம் மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமையோ அல்லது தார்மீக உரிமையோ அவருக்கில்லை. அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும். எப்படியும் நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டோமாயின், அது எமது கட்சியை பாதிக்கும். எனவே கட்சியை முன்னேற்றுவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சரத் பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக ஆட்சியை கலைக்குமாறு கோரிக்கை-

தமிழகத்தில் நிலவும் சட்ட – ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக ஆட்சியை கலைக்கும்படிமனு கையளிக்கப்படவுள்ளதாக திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்தள்ளது. இது தொடர்பில், தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனு கையளிக்கவுள்ளதாக திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக, கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் இடம் பெற்ற போராட்டங்களை ஆய்வு செய்துள்ளதாக தி.மு.க தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டவும் திராவிட முன்னேற்ற கழகம் தயாராகி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறுவனைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டு-

Siruvanai kaapattriya iranuvam (1)சுமார் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஒன்றறை வயது சிறுவனான சிவக்குமார் சிந்துஜனைக் காப்பாற்றிய இராணுவத்தினர் இருவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் கடமையாற்றும் 57வது படையணி, 3வது கஜபா ரெஜிமென் அதிகாரிகள் கடந்த 2ம்திகதி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குழந்தை கிணற்றில் விழுந்து விட்டதாகவும், அதனைக் காப்பாற்றுமாறும் குறித்த இராணுவத்தினரிடம் உதவி கோரியுள்ளார். இதனையடுத்து கோப்ரல் விஜித பெரேரா மற்றும் கோப்ரல் டீ.எம்.லீலாரத்ன ஆகியோர் கிணற்றில் குதித்து சிறுவனைக் காப்பாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more

புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு-

1யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று 07.10.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, இதன்போது ஆசிரிய, ஆசிரியைகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்றுக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியுதவியில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான நினைவுப் பொருட்களை புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திரு. லோகன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

a b d

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு-

janathipathi anaikuluvin pathivi kaalamகாணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவின் சட்டத்தின் 393 ஆம் சரத்தின் 4ஆம் பிரிவின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய 2013 ஆகஸ்ட் 15ஆம் திகதி 1855ஃ19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கான காலப்பகுதி 1990ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை என வரையறை செய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த வரையறை இந்திய இராணுவ ஆட்சிக்காலம் 1983ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்குமாகாணத்திலுமாக 7தடவைகள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் ஆரம்பமாகி இவ்வாண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் ஒரு வருடத்தை ஆணைக்குழு அடைந்திருந்த நிலையில் அதன்கால எல்லை நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆணைக்குழுவின் செயற்பாட்டு காலத்தை 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு-

jeyalaitha_karnataka_002சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை மனு மற்றும் தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்நிலையில் பிணை மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். மதிய உணவு இடைவேளைக்காக 2.30 மணிவரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூடியது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். முதலில் பிணை கிடைத்ததாக வெளியான தகவல் கேட்டதும், பெங்களுர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். இனிப்புகள் பரிமாறப்பட்டன. பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அதாவது, அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் நிபந்தனை பிணை வழங்கப்படுவதற்கு ஆட்சேபம் இல்லை என்ற நிலையில் இந்த மகிழ்ச்சி நிலவியது. இந்நிலையில் வாதம் முடிந்தபிறகு மதியம் 3.35 மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது, இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் குற்றவாளிக்கு பிணை வழங்க எந்த வித முகாந்திரமும் இல்லை என்றும், குற்றவாளி தரப்பில் கோரப்பட்ட தண்டனைக்குத் தடை கோரும் மனு மற்றும் பிணை மனுவை நிராகரிப்பதாகவும் அறிவித்தார். ஜெயலலிதா பிணை மனு நிராகரிக்கபட்டதாக செய்தி வெளியானவுடன் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகம் அடைந்திருந்தனர்.

ரணில் முன்னிலையில் ஹரீன் சத்தியப்பிரமாணம்-

12tm(16)ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. ஊவா மாகாண எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, பிரதான கொறடாவாக ஜே.எம். ஆனந்த குமாரசிறி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள கூட்டமைப்பு உருவாக்கப்படும்: ஞானசார தேரர்-

images(1281)தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்நாட்டின் தலைவர்களாக மாற, பொதுபல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்நாட்டின் தலைவர்களை, பொதுபல சேனாவே உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த தேரர், இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக இக்காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டை விநியோகம்-

துரித கதியில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போருக்கு, மூன்று நாட்களில் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. தேவையான ஆவணங்களை சரியான முறையில் அனுப்பிவைக்கும் விண்ணப்பதாரிகளுக்கு இவ்வாறு அடையாள அட்டை துரிதகதியில் வழங்கப்படவுள்ளது. அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்து அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் 011-2555616 மற்றும் 011-2506458 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியமுடியும். இதேவேளை, விரைவில் இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கடலில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்-

மியன்மார் கடலில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை மீனவர்கள் நிர்க்கதியான நிலையில் தத்தளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீனவர்கள் பயணித்த படகுகள் புயல் காற்றில் சிக்கி மியன்மார் கடற்பரப்பில் தத்தளித்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 35 மீன்பிடிப் படகுகள் புயலில் சிக்கியுள்ளன. இதில் 180க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயணித்துள்ளனர். மீனவர்களை மீட்பதற்கு மியன்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மியன்மார் அரசாங்கத்துடன் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார். அந்த வழியாக பயணித்த கப்பல்களிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. இந்தப் படகுகளுடன் பயணித்த மேலும் 3 படகுகளில் பயணித்த 15 மீனவர்களை மியன்மார் அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டின் பரப்பிற்குள் பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறை காவலர்கள் தொழிற்சங்க நடவடிக்கை-

சிறைச்சாலைகள் சிலவற்றின் காவலர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு சிறைச்சாலையில் காவலர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து இன்று கடமைக்குச் செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது. சிறை காவலர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் சரீரப் பிணையில் விடுதலை-

thiyagarajah thuvarageswaranபொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்ட தியாகராசா துவாரகேஸ்வரன் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ். நீதவான் முன்னிலையில் நேற்றுமாலை சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு ஏ9 வீதி வழியாக செல்லாமல், மாற்று வழியில் சென்றதால் குறித்த பஸ்ஸை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். இதன்போது போக்குவரத்து சட்டத்திற்கு அமைய பொலிஸார் தண்டச் சீட்டொன்றை வழங்கியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த துவாரகேஸ்வரன், பொலிஸர் வழங்கிய தண்டச் சீட்டை கிழித்தெறிந்துள்ளதுடன், அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதற்கமைய கைதுசெய்யப்பட்ட அவர் யாழ். நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.