courtsகொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் அளுத்கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இடம்பெற்றது. Read more