Header image alt text

iyanaar03வவுனியா தாண்டிக்குளத்தில் மாபெரும் இரத்ததான முகாமும், தீபாவளி சிறப்பு நிகழ்வுகளும்.
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் தீபாவளி திருநாள் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
அந்த வகையில் முதல் நிகழ்வாக காலை 08.30 மணிக்கு இளைஞர்களின் ஒண்றிணைவில் வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் அவசியத்தை உணர்ந்து மாபெரும் இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் 09.30 மணிமுதல் ஆரம்பமாவதுடன். மாலை நிகழ்வுகள் 02.00 மணிக்கு ஆரம்பமாகும்.

மேலும் அமைப்பிதழ், நிகழ்சிநிரலைப் பார்க்க Read more

solothun01சுவிட்சர்லாந்தின் சொலத்தூன் மாநிலத்தில் வசித்து வந்த இரு இலங்கைத் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு காரணமாகும்.

சொலத்தூன் மாநிலத்தின் ரயில் நிலையத்தின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள கடை அருகே, 25.10.2016 செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் தொழில் ரீதியாக (விழாக்களுக்கு வீடியோ எடுத்தல்) நண்பர்களாக இருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட வவுனியா குருமன்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கார்த்திக் பாலேந்தின் என்ற இளைஞர் ஆபத்தான நிலையில் பொலிசாரால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாள் மதியம் இறந்துள்ளார். Read more

b1aceஇராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக கருதப்படும் மொசூல் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கில் அந்நாட்டு மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் கைவசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மொசூல் நகரை நோக்கி அரசு படைகள் மற்றும் அதன் கூட்டணி படைகளும் முன்னேறி வரும் நிலையில், கடத்தப்பட்ட பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. Read more

calais_campபிரான்சின் வடக்கு பகுதியில் இருக்கும் கலே நகருக்கு அருகேயுள்ள சர்ச்சைக்குரிய குடியேறிகள் முகாம் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த முகாமில் இரு பெரும் தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

ஏறக்குறைய வெறிச்சோடிக் கிடக்கும் ‘ஜங்கிள்’ என்று அறியப்படும் இந்த முகாமிலிருந்து இந்த வாரம் சுமார் 6 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில குழந்தைகள் உள்பட 80 குடியேறிகள் இன்னும் அங்கு இருக்கின்ற ஒரு பள்ளியிலும், ஒரு மசூதியிலும் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்று அறக்கட்டளை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. Read more