Header image alt text

chandrikaமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தீர்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா களத்தில் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரி-ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி-ஐ.தே.கவின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டாபய குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

ritaஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர். Read more

passportஇலங்கையர்கள் 800 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமைக்கான சான்றிதழ் நாளை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார். Read more

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு பெல்ஜியம் நோக்கி இன்று அதிகாலை பயணமாகியுள்ளார். 9பேர் கொண்ட குழுவுடன் பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவே அவர் அங்கு சென்றிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. Read more

maithri-modiஇந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இன்றுகாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அயல் நாடான இந்தியாவைச் சந்திப்பதில் சந்தோஷமடைவதாகவும், பிராந்தியத்தின் ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

anurathapuram-jailஅநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.