இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றுமாலை புதுடில்லியிலுள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பதாக இந்திய குடியரசுத் தலைவரிடம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more