Header image alt text

siddharthanதமிழ் மக்களுடைய உடனடி அடிப்படைப் பிரச்சினைகளான காணி விடுப்பு, அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணாமல் போனோர் சம்பந்தமான விடயம், வேலை வாய்ப்பு, வாழ்வாதார விடயம் போன்றவற்றுக்கே தீர்வை வழங்க முடியாது திண்டாடும் இந்த அரசாங்கம் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கப் போகிறது என்ற கேள்வி இன்று பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இருந்தாலும் கூட இன்று இலங்கை அரசியல் மேடையில் சில நகர்வுகள் நடைபெறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.     அவர் மேலும் தெரிவிக்கையில்…. Read more

dgfயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில் அதற்கு நீதி கோரி மாணவர்கள் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான இன்றைய கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்றுகாலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். Read more

c-14iyanaar03

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் அவர்களின் தலைமையில், தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு வி.யோகநாதன் முன்னிலையில் 29.10.2016 சனிக்கிழமை கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read more

uyiuiமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கெட்டாஞ்சேனை பகுதியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முறக்கெட்டாஞ்சேனை பிரதான வீதியை அண்மித்த மக்கள் குடியிருப்பு மற்றும் பாடசாலை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் முறக்கெட்டாஞ்சேனை இராணுவ முகாமின் சில பகுதிகள் மக்கள் தேவைக்காக கடந்த 2014ம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தன. Read more

australiaபடகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Read more