கடந்த செவ்வாய்க்கிழமை ஹேய்ட்டியின் தென்மேற்கு பகுதி முழுவதையும் கடுமையாக சேதப்படுத்திய மெத்யூ சூறாவளி காரணமாக சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில், தென்மேற்கு ஹெய்ட்டியில் அணுக முடியாத வகையில் இருக்கக்கூடிய பகுதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைத்தூர கடலோர நகரங்களில், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், சில பகுதிகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், அனைத்து கட்டடங்களும் சரிந்து விழுந்திருப்பதாகவும் தொண்டு நிறுவன பணியாளாரான கேட் கோரிகன் தெரிவித்துள்ளார். Read more