Header image alt text

aank-shukiஇலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள கருத்து தெரிவித்த மியன்மார் வெளிவிவகார அமைச்சர் ஆன் சாங் சூகி ஆன் சாங் சூகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கை தொடர்பில் தனது திருப்தியினையும் வெளியிட்டார்.

இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றுவரும் பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. Read more

police-stationகிளிநொச்சியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் கி.ரதீஸ் என்ற வர்த்தகர் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் போயிருந்தார். Read more

nadesanமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கை நிரூபமாவின் கணவரான திருக்குமரன் நடேசன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். Read more

viladimir-putinஇலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருவதாக குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read more

chinaஅணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்து வதற்கு சீன, இலங்கை தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. Read more

dhilrukshiஇலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். Read more

nadesanமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கை நிரூபமாவின் கணவரான திருக்குமரன் நடேசன் பொலிஸ் நிதி குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். Read more

ssssயாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குடிநீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் கீழ் அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதி தவிசாளருமான சபீக் ரஜாப்தீன் தலைமையில் இது சம்பந்தமான குறைபாடுகள் குறித்து ஆராயப்பட்டன. Read more

sl armyஇராணுவ பிரதானி பதவிக்கு தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இராணுவ பிரதானியாக பதவி வகிக்கும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றுச் சென்றுள்ள நிலையில் அவரது பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

பிரதி இராணுவ பிரதானியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, கடந்த செப்டெம்பர் மாதம் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.